இந்தோனேசியாவில் மீண்டும் நில நடுக்கம்!

இந்தோனேசியாவின் லம்பொக் தீவில் மீண்டும் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நில நடுக்கத்தின் போது கட்டடங்கள் பல சேதமடைந்துள்ளன.

உயிரிழப்புகள் தொடர்பான எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த வாரயிறுதியில் இடம்பெற்ற பாரிய நில நடுக்கத்தில் 131 பேர் வரை உயிரிழந்ததாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருந்தது.

இந்தோனேசியாவின் உள்நாட்டு ஊடக தகவல்களின் அடிப்படையில் சுமார் 347 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

இதன்போது பல கிராமங்கள் முற்றாக சேதமடைந்ததாக லம்பொக்கில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினரான கிறிஸ்ரோபர் ராஸி தெரிவித்துள்ளார்.

இந்த இயற்கை சீற்றம் காரணமாக சுமார் 1400 பேர் காயமடைந்ததுடன், 156,000 பேர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு